தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தை முன்னிட்டு Scarborough-Agincourt மற்றும் Ontario வாழ் தமிழர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் இருப்பு, கலாச்சாரம், மரபுகள், வலுவான குடும்பம் மற்றும் சமூக நெறிமுறைகள் ஆகியவை எங்கள் பன்முகத்தன்மையை வலுப்படுத்தி, நமது சமூகத்தை வளப்படுத்தி, வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், குடும்பத்தை வளர்ப்பதற்கும் சிறந்த இடமாக மாற்றியுள்ளது.
புனிதமான பொங்கல் அறுவடைத் திருநாளின் மிகுதியாக, தமிழ் சமூகத்தின் பங்களிப்புகள் இங்கு கனடாவில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு ஏராளம் இடம்பெறுகின்றன
உங்களின் தேசிய அடையாளத்தைப் பேணுவதற்கும், வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கப்படுவதையும், இனப்படுகொலையை எதிர்ப்பதற்கும் உங்களின் உறுதிப்பாடு ஊக்கமளிக்கிறது மற்றும் பாராட்டுக்குரியது. உங்களைப் பற்றியும் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளைப் பற்றியும் நான் பெருமைப்படுகிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இங்ஙனம்
அரிஸ் பாபிகியன், ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்
ஸ்கார்பரோ-அஜின்கோர்ட்
I would like to extend my heartfelt congratulations to the Tamil residents of Scarborough-Agincourt and Ontario on the occasion of Tai Pongal and Tamil Heritage Month.
Your presence, culture, traditions, strong family and community ethos have strengthened our diversity and enriched our society making it a better place to live, work, and raise a family.
As the abundance of the Tai Pongal harvest festival, the Tamil community’s contributions are far too numerous to cite here.
Your determination to preserve your national identity, resist forced assimilation and genocide is inspiring and commendable. I am proud of you and the values you represent.
Happy Tai Pongal
Aris Babikian, MPP
Scarborough-Agincourt