(13-01-2022)
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, களு துஷார என்ற கைதியை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 33 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.