(15-01-2022)
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகிய இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன்,.M.A.சுமத்திரன் ஆகியோர் உட்பட துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச்செயலக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் தொடர் நடவடிக்கைக்கான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டன.
தொடர்ந்து துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவை துறை சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டன.
அவற்றில் சுகாதாரம், கல்வி,உள்ளூராட்சி, நீர்வழங்கல்,மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி,அனர்த்த முகாமைத்துவம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, விளையாட்டு, கிராம அபிவிருத்தி,சமூக சேவைகள்,சிறுவர் பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றல், இளைஞர் விவகாரம்,வீடமைப்பு, காணி உள்ளிட்ட சேவைத் துறைகள் சார்ந்த முன்னேற்றங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அத்தோடு 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தி இனங்காணப்பட்டுள்ளன.
பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.