கனடா மொன்றியால் வாழ் இளம் பாடகர் கௌரீஸ் சுப்பிரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16ம் திகதி தனது 19வது பிறந்தநாளை முன்னிட்டு தாயகத்தில் தனது தாயார் பிறந்த கிராமத்தில் 10 பாடசாலை மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகளுக்கு ரூபாய் 10000 வீதமும் விழிப்புலனற்ற மூவருக்கு தலா ரூ50000 வீதம் வாழ்வாதார உதவிகள் வழங்கினார். மேற்படி அன்பளிப்புக்களை கோப்பாய் பிரதேச செயலர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்கள் வழங்கி வைத்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவின் மொன்றியால் மாநகரில் தனது தாயாருடன் வசித்துவரும் செல்வன் கௌரீஸ் சுப்பிரமணியம் விழிப்புலன் அற்ற பாடசாலையில் சிறப்புக் கல்வி பெறுகின்றார். அத்துடன் தான் எதிர்காலத்தில் ஒரு சட்டவல்லுனராக வருவதற்குரிய உயர் கல்வியை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. கடந்த காலங்களில் கனடாவின் மொன்றியால் மற்றும் ரொறன்ரோ நகரங்களில் மேடைகளில் பாடுவதையும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் நன்கு அறிமுகமானவர்.
இதன் மூலம் கிடைக்கும் நிதியை தாயகத்தில் விழிப்புலன் அற்றவர்களுக்கு அனுப்பிவைத்து தனது தாயாரின் வழிகாட்டலில் இருவரும் மன நிறைவு அடைந்து வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
செய்தி- அர்சுன்- Arjune