லண்டன் நாட்டில் உள்ள ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளையினர் வழங்கிய ரூபா 1,35,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க கடந்த கால அசாதாரண சூழ் நிலைகளினால் பாதிக்கப்பட்டு தமது உழைப்பாளி பிள்ளைகளை இழந்த நிலையில் தற்போதைய Covid 19 சூழ் நிலைமை, நாட்டின் பொருளாதார சூழ்நிலை என்பவற்றினால் பொருளாதார ரீதியாக மிக நெருக்கடியான நிலையில் தனிமையில் வாழ்ந்து வரும் மாங்குளம், நீதிபுரம், ஒலுமடு, செம்மலை, ஓமந்தை, கிழவன்குளம்,திருமுறிகண்டி, கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 45 முதியோர் குடும்பங்களுக்கு அவர்களின் அன்றாட உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்ளவதற்காக தொடர்ச்சியான முறையில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வரும் நிலையில் 42வது தடவையாக இன்றைய தினம் தலா ரூபா 3,000 பெறுமதியில் குறித்த 45 முதியோர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.