(17-01-2022)
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர், இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸை, நவகமுவ பகுதியில் நிறுத்தி இராணுவப் புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டது.
இதன்போது, 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தம் உடமையில் வைத்திருந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டு, இரட்டைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இரட்டைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.