வவுனியா தெற்கு.வடக்கு வலயங்களைச் சேர்ந்த 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை IMHO –USA மற்றும் Ratnam Foundation-UK இணைந்து வழங்கியது மட்டுமன்றி இப்பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த வளவாளர்களினால் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது.. இவற்றுள் வவுனியா தெற்கு வலயத்திலுள்ள வெங்கலச் செட்டீகுளம் கோட்டத்தை சேர்ந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஏழு திறன் வகுப்பறைகளுள் இறுதியாக மூன்று பாடசாலைகளுக்கான திறன் வகுப்பறைகள் கடந்த 6ஆம் திகதி (Jan 6th 2022) திறந்து வைக்கப்பட்டன.
• வதெ/வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம்
• வதெ/அடைக்கல அன்னை வித்தியாலயம்
• வதெ/அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம்
முதன்மை விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுரேந்நிரன் அன்னமலர் அவர்களும் சிறப்பு விருந்தினராக IMHO –USA இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி திரு.சு.கிருஸ்ணகுமார் அவர்களும் கௌரவ விருந்தினராக கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.செல்வரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்;
இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து மேலைத்தேய வாத்திய இசை மற்றும் கோலாட்ட இசையுடன் வரவேற்கப்பட்டனர். அத்துடன் மங்கள விளக்கேற்றலுடன் இறை வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. ;.இதனை தொடர்ந்து திறன் வகுப்பறைக்கான பெயர்ப்பலகை விருந்தினர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் திறன்பலகை செயற்பாடுகளும் வைபவ ரீதியாக தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களினால் சிந்தனை தூண்டலுடனான பல நிகழ்வுகள் நடாத்திக் காட்டப்பட்டமை சிறப்பான அம்சம்..எண்சட்டமும் இடப்பெறுமானம் பற்றி தரம் 4 மாணவியினதும் கடிகார நேரம் பார்த்தல் பற்றி தரம் 3 மாணவியினதும் வரலாற்றுப்பாடத்தில் மரபுரிமை தொடர்பான விடயம் பற்றி தரம் 8 மாணவியினதும் முன்னளிக்கைகள் உட்பட்ட பல நிகழ்வுகள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் திறன்பலகையை பாவித்து நடாத்திக்காட்டப்பட்டன.கரும்பலகையா திறன்பலகையா சிறந்தது என இரு மாணவர்களினால் நாடகப்பாணியில் அமைந்த உரையாடல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
இறுதியாக விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.மிகவும் கஸ்ட்ட பிரதேச பாடசாலைகளை தெரிந்து திறன் வகுப்பறைகளை வழங்குவது மட்டுமன்றி ஆசிரியர்களையும் பயிற்றுவித்து அளப்பரிய சேவைகளை எமது மாணவர்களுக்கு வழங்கிவரும் IMHO –USA மற்றும் ; Ratnam Foundation-UK அமைப்புகளுக்கு விருந்தினர்களாலும் பாடசாலைச்சமூகத்தினராலும் நன்றி கலந்த பாராட்டுரைகள் வழங்கப்பட்டன.
இறுதியில் நன்றி உரையுடன் விழாக்கள் இனிதே நிறைவுற்றன.