(18-01-2022)
ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் வீதி சீர் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அக்கிராம மக்கள் நாளாந்தம் வேலைக்கு செல்வது மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நகரம் நோக்கி செல்வதற்காக குறித்த வீதிகளை பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறித்த வீதிகள் சீர்ரமைக்கப்படாமையின் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் வயயோதிபர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் சில நாட்களில் குறித்த வீதிகளில் பயணிக்க முடியாமையினால் பாடசாலைக்கு செல்வதும் இல்லை என தெரிவிக்கின்றனர்.
நிலமையை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதிலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. பாதை புணர் நிர்மாணம் தொடர்பில் இருவேறு அரசியல் தலையீட்டின் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் ஐந்து தடவைகள் பாதை நிர்மாண செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நிறைவுறா நிலையே காணப்படுகிறது.
தற்போது புணரமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட சில பாதைகள் கூட உரிய தரத்துடன் இல்லை. என்பதுடன் கட்டப்பட்டுள்ள பாதைகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக குறித்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறித்த பாதையில் நீர் ஓடக்கூடிய நிலையில் இல்லை என்பதுடன் அதில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு டெங்கு நோய் பரப்பக்கூடிய நுளம்புகள் பெருக்கம் ஏற்படுவதுடன் நாட்டில் அதிவே வீதிகள் மற்றும் பிரதான வீதிகள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் தமது கிராமத்தில்; உள்ள வீதிகள் புணரமைக்கப்பட வேண்டுமென பல வருடங்களாக தாம் முன்வைத்த கோரிக்கை பூர்த்தி செய்யப்படமையினால் கிராம மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
நயனா ராசாதாரி – கிராம சங்கத்தின் தலைவர் –
கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் தான் குறித்த பாதையின் நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த பாதையின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டறை வருடங்களாகின்றன. இதுவரையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. கடந்த அரசாங்கத்தை சேர்ந்த சிலர் இந்த கட்டுமானத்திற்கு இடையூறாக உள்ளனர்.
சசிர கஹதவல – கிராமவாசி
‘இந்த பாதையின் நிர்மாண பணிகள் ஐந்து அல்லது ஆறு தடவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையிலேயே கைவிட்டு செல்கின்றனர் நிறைவடைந்ததாக தெரியவில்லை.’
நயனா ராசாதாரி – கிராம சங்கத் தலைவர்:
‘மோசமான கட்டுமானத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இந்த கொங்கிரீட் வடிகால் இரும்பு பயன்படுத்தப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் தான் இந்த பகுதி உடைந்துள்ளது. இவ்வாறான வீதி பணிகளுக்கு இது போன்ற சிறிய இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.”
இந்திராணி குணவர்தன – கிராம சங்கம ;:
‘தண்ணீர் செல்லும் வகையில் வடிகால்கள் முறையாக அமைக்கப்படவில்லை. இந்த வாய்க்கால்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன.’
நாலக புஷ்பகுமார – நுகர்வோர் உரிமைகள் சங்கம்; ‘பொலன்னறுவை’
குறித்த பாதையின் நிர்மாண பணிகளுக்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதை நிர்மாணம் மேற்கொள்வோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான பணிகளை மேற்கொள்கின்றனர். ஒரு பாதை நிர்மானிக்கும் போது ஏனைய பகுதியில் உள்ள பாதை புனரமைக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். இதனால் குறித்த பாதை நிர்மாண பணிகள் மந்த நிலை அடைகின்றன.
குணரத்ன பண்டார – கிராம சங்கம்:
‘குறித்த கட்டுமான பணிக்கு இடையூறாக மதில் ஒன்று உள்ளது. அதனையும் அகற்றி பாதையை மிக வேகமாக முடித்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.’