எமது பாடசாலை வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகஸ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள 1c பாடசாலை இங்கு தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் 17 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
இங்கு சின்னடம்பன், ஆயிலடி, பெரியமடு, நயினாமடு, இராசபுரம், சடவன்குளம் ஆகிய ஆறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். நவீன தொழிநுட்ப வசதிகள் குறைவாக உள்ள இப் பாடசாலைக்கு Radnam Foundation மற்றும் திரு சி.தவமோகன் ஆகியோரின் நிதியுதவியுடன் திறன் வகுப்பறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இத்திறன் வகுப்பறை வலயக்கல்விப் பணிப்பாளர், திருமதி
மல்லிகாதேவி சிவசுப்பிரமணியம் (அனுசரனையாளரின் தாயார்) மற்றும் பெற்றோறர்கள்,
மாணவர்கள் ஆசிரியர்கள் அயற்பாடசாலை அதிபர்கள் , முன்னிலையில் அதிபரின்
தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.