ஒன்றாரியோ மாகாண அரசின் மூத்த பிரஜைகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும். ஸ்காபுறோ வடக்கு தொகுதியின் உறுப்பினருமான கௌரவ றேமண்ட் சோ அவர்களின் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த ‘ தமிழர் மரபுரிமை மாதம்’ கொண்டாட்ட நிகழ்வு கடந்த பொங்கல் தினமான 14ம் திகதி வெள்ளிக்கிழமையன்று. இணையவழி ஊடாக இடம்பெற்றது.
கௌரவ றேமண்ட் சோ அவர்களின் தொகுதி அலுவலகத்தின் ஊழியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் அரிஸ் பாபிகியன். லோகன் கணபதி. மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களில் லோகன் கணபதி அவர்களும் விஜேய் தணிகாசலம் அவர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தங்கள் உரைகளை நிகழ்த்தினர்.
பல்வேறு கலை மற்றும் சமூக சேவையாற்றும் அமைப்புக்களும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.
அமைச்சரும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ றேமண்ட் சோ அவர்கள் தனது உரையில் தனது தொகுதியில் வாழும அனைத்து தமிழ் மக்களுக்கும் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் ஏனைய தமிழ் மக்களுக்கும் தனது வாழ்ததுக்களைத் தெரிவித்த பின்னர் மிகவும் தொன்மையான பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்ட தமிழ் ◌மொழி பேசும் மக்களோடு இணைந்து பணியாற்றுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் பல்வேறு வகையான தேவைகளை அமைச்சர் என்ற வகையிலும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் வழங்குவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டதாகும்.