(மன்னார் நிருபர்)
(22-01-2022)
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வத்துடனும், நேரத்துடனும் பெற்றோருடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற உள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.
பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்காக சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.