சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் நிறுவப்படவுள்ள மின் மயானத்திற்கான மயான அபிவிருத்திக் குழு 22/01/2022 சனிக்கிழமை பிற்பகல் தெரிவு செய்யப்பட்டது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த குழுத் தெரிவில்;
மின் மயான அபிவிருத்திக் குழுத் தலைவராக சாவகச்சேரி வர்த்தக சங்கத் தலைவர் ந.சிவபாலன்,செயலாளராக சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் இ.சிவமங்கை,பொருளாளராக அதிபர் தேவரதி,திட்ட இணைப்பாளராக சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி,உப தலைவராக சாவகச்சேரி பிரதேசசபை உபதவிசாளர் செ.மயூரன்,உப செயலாளராக சட்டத்தரணி திசாந்தினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.அத்துடன் சாவகச்சேரி லயன்ஸ் கழகம்,கொடிகாமம் வர்த்தக சங்கம்,கைதடி வர்த்தக சங்கம்,சாவகச்சேரி இளைஞர் கழகம்,வைத்தியர்கள்,சமாதான நீதவான்கள்,கிராம சேவகர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பாக ஒவ்வொருவர் என்ற ரீதியில் 17பேர் கொண்ட மின் மயான அபிவிருத்திக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் மின் மயானம் நிறுவ சுமார் ஒன்றரைக் கோடி தேவை என்ற நிலையில் இதுவரை 18இலட்சம் ரூபாய் நிதியை தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தினரால் சேகரிக்கப்பட்டு மின் மயான அபிவிருத்திக் குழு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்மராட்சி மைந்தர்கள் மற்றும் பொது அமைப்பினர்கள் அனைவரும் உங்களால் இயன்ற நேரடிப் பங்களிப்பினை வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நேரடியாக பணம் வைப்புச் செய்வதற்கு:-
Chavakachcheri Kannadippiddy Electrical Cemetry Project
Bank :- People’s Bank, Chavakachcheri.
A/C No :- 110-2-001-7-0008145
1)Mr.Sivabalan Namasivayam
தலைவர்:-சாவகச்சேரி மின் மயான அபிவிருத்திக் குழு
2)Mrs.Sivamankai Ramanathan
Chairman urban Council, Chavakachcheri
3)Mrs.Devarathy Sutheskaran
(Principal)