நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கணணிகளை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. செல்வம் தலைமையில் கடந்த 20.01.2022 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திரு. மோகன் அவர்களும், கோட்ட கல்வி பணிப்பாளர், IMHO நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஷ்வரன் அவர்களும், இரட்னம் அறைக்கட்டளை, வன்னி ஹோப் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் திரு. முரளி அவர்களும் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இரட்னம் அறைக்கட்டளை, வன்னி ஹோப் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நவீன கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக இப் பாடசாலை மாணவர்களுக்கு ஐந்து கணணிகளை வழங்கியது. பல வருட காலமாக கணனி வசதி இப் பாடசாலை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக காணப்பட்ட நிலையில் இரட்னம் அறைக்கட்டளை, வன்னி ஹோப் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. மேலும் எதிர்காலத்தில் தொழிநுட்ப பாட துறைகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு இது வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மேலும் இந் நிகழ்வில் கலந்துக் கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் தனதுரையில் குறித்த நிறுவனகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறியதோடு, மாணவர்கள் இவ் வளங்களை பயன்படுத்தி எதிர்கால நவீன உலகிற்கு தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.