மன்னார் நிருபர்
(24-01-2022)
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, சிறுத்தோப்பு பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் தொடர்ச்சியாக உரிய நேரத்தில் திறக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் கிராமத்தில் இருந்து பேசாலை வரையிலான குறித்த பிரதான வீதியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் மாத்திரம் அமைந்துள்ளது.
குறித்த எரி பொருள் நிறப்பும் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக எரிபொருட்கள் போதிய அளவு கையிறுப்பில் இருப்பது இல்லை எனவும், அதனை தொடர்ந்து உரிய நேரத்தில் திறக்கப்படுவது இல்லை எனவும் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பேசாலை மற்றும் அதனை அண்டிய பல பகுதியில் உள்ளஅரச தனியார் பணியாளர்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அசமந்த போக்கு காரணமாக பெரும் சிரமங்களை தொடர்ச்சியாக எதிர் கொண்டுள்ளது டன் குறித்த பிரதேசத்தில் உள்ளவர்கள் மீன் பிடி தொழிலை அதிகம் மேற்கொண்டு வரும் நிலையில் மீன் பிடி தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணையை உரிய முறையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பாட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த நில நாட்களாக உரிய நேரத்தில் குறித்த எரிபொருள் விற்பனை நிலையம் திறக்கப்படுவதில்லை எனவும், இன்றும் (24) காலை சுமார் 7.50 மணி அளவில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்பட்ட போது அங்கு எரிபொருளை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் தாமதம் குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாளரிடம் கேள்வி எழுப்பிய போது கடமையாற்றுகின்றவர் தாமதம் குறித்து வினாவிய பெண்ணிடம் அனாகரிக வார்த்தையை பாவித்து அனாகரிகமாக நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ள தோடு, இவ் விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.