கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா “விழித்தெழு பெண்ணே” அமைபபின் ஏற்பாட்டில் கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்ப் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.
100 பெண்மணிகள் கௌரவிக்கப்பட்ட இந்த பெருவிழாவில் இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வாழும் பெண்மணிகளுள் கலை இலக்கியம் சமூக சேவை, நாடகம், சினிமா, சமயப் பணி போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்காற்றி வரும் வெற்றியாளர்கள் இந்த விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தங்கள் விருதுகளையும் ஒன்றாரியோ மாகாண அரசின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களில் பிரபல எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை மற்றும் ஸ்ரீமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரும் அடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த கனடா “விழித்தெழு பெண்ணே” அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் மற்றும் அவரது குழுவினர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
மேற்படி இரண்டு பெரு நிகழ்விற்கு இலங்கையின் வீரகேசரி நாளிதழ். சக்தி தொலைக்காட்சி. கனடாவின் உதயன் வார இதழ் மற்றும் கனடா சங்கர் நல்லதம்பி அவர்களின் VIBARANT HOSPITALITY GROUP நிறுவனம் ஆகியவை பிரதான அனுசரணையாளர்களாக தங்கள் ஆதரவை வழங்கியிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
– சத்தியன்