(மன்னார் நிருபர்)
(27-01-2022)
மன்னார் மாவட்டத்தில் சடுதியாக குறைவடைந்து வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் விடுத்துள்ள நாளாந்த கொரோனா தொற்று நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-இன்று வியாழக்கிழமை(27) காலை விடுத்துள்ள குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
-மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது நேற்று(26) புதன்கிழமை மாலை மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இவ்வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 3268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் தற்போது வரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.