கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் 5 நாட்களுக்கு தன்னை சுய தனிமைப்படுத்திக்கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே கொரோனாவால் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தது பற்றி உதவியாளர்களால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை அவருக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டதும் , அவர் உடனடியாக உடனடிப் சோதனைக்கு உள்ளாகியதாகவும் எனினும் அந்த சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டதாவும். எவ்வாறயினும்
தனதும் தனது குடும்பத்தின் நலன் கருதியும் ஏனையோரின் நலன் கருதியும் இந்த முன்னெச்சரிக்கை முடிவை எடுத்துள்ளதாகவும் அவர், சுகாதார விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவதாகவும், 5 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் அலவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் இணைவழி வழியாக ஊடகங்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடுகையில் கனடியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் – தடுப்பூசி போடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடியப் பிரதமர் அவர்களின் துணைவியார் சொபியா அவர்களும் 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அளவில் இங்கிலாந்துக்கு சென்ற போது அங்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இரண்டு வாரங்களுக்கு மேலாக கடுமையான தனிமைப் படுத்தலுக்கு உள்ளாகியிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்