கனடாவில் பல வருடங்களாக இயங்கிவருவதும் தமிழர்களால் நிர்வகிக்கப்பெற்று வருவதுமான சமூக சேவை நிறுவனம் FRONTLINE COMMUNITY CENTRE ஏற்பாட்டில் அண்மையில் ‘ ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் நிறுவனரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி விஜயா குலாவின் தலைமையில் அமைக்கப்பெற்ற சிறப்புக் குழு இந்த வைபவத்தை நேர்த்தியான முறையில் திட்டமிட்டது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்காபுறோ வடக்கு மாகாணப் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் ஒன்றாரியோ மாகாணத்தில் முதியோர்களின் நலன் பேணும் அமைச்சருமான கௌரவ றேமண்ட் சோ அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். ரொறன்ரோ கல்விச் சபையின் தமிழ் மொழி சார்ந்த கற்கைநெறிகளுக்கான திட்டப் பொறுப்பாளருமான தமிழ் விரிவுரையாளருமான பொன்னையா விவேகானந்தன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பெற்றிருந்தார்.
அன்றைய நிகழ்வில் தமிழர் பண்பாட்டை நன்கு புலம்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன. FRONTLINE COMMUNITY CENTRE அமைப்பின் தொண்டர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கு பற்றிய நிகழ்வுகளும் அமைப்பின் மூத்தோர் பிரிவில் அங்கத்தவர்களாக உள்ள உறுப்பினர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ஸ்காபுறோ வடக்கு மாகாணப் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் ஒன்றாரியோ மாகாணத்தில் முதியோர்களின் நலன் பேணும் அமைச்சருமான கௌரவ றேமண்ட் சோ அவர்கள் அங்கு உரையாற்றுகையில் கடந்த 30 வருடங்களாக நகரசபையின் உறுப்பினராகவும் தொடர்ந்து மாகாணப் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றும் தமக்கு தமிழ் மக்களின் சிறப்பியல்களும் அவர்களது பாரம்பரிய பண்பாட்டுக்கோலங்களும் மிகவும் பரிச்சியமானவை என்று குறிப்பிட்டார்