கடந்த வெள்ளி சனி தினங்களில் ஒட்டாவா மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடிய கனடாவின் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்தினாலம் சில இடங்களில் சட்ட ஒழுங்குகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி கனரக வாகனங்களின் உரிமையாளர்கள். பலர் ஒன்றாரியோ மாகாணத்திலிருந்து தான் சென்றவர்கள் என்பதும் குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாகத்திலிருந்து சென்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடிய அரசானது கனரக வாகன ஓட்டிகள் கொவிட்–19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவதற்கும் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததன் காரணமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் அணிவகுத்து ஒட’டாவா மாநகரில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றம் நோக்கிச் சென்றன என்று அறியப்படுகின்றது
இந்த மாத நடுப்பகுதியில் கனடாவும், அமெரிக்காவும் கனரக வாகன ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக்கின. அதற்கு எதிராக “சுதந்திரமான வாகன அணி” எனும் பெயரில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது அரசாங்கத்தின் அத்துமீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது. உலகின் மிக நீளமான எல்லையைக் கடக்கும் வாகனமோட்டிகள் அதனால் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்த போதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றில் அவர் பணியாளர்களோடு தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அங்கு சில பொருட்களுக்கு சேதங்களை விளைவித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, கனடியப் பிரதமர் அவர்கள் மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வில்லை என்றும் எனினும் கனடிய பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததாகவும் அறியப்படுகின்றது