(30-01-2022)
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணம் தொடர்பாக ரிஷாட் மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி ஹிஷாலினி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதுவரையில் வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீதும் இந்த விடயத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.