ஈழத்திலிருந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘ஞானம்’ சஞ்சிகை நடத்திய மாபெரும் இலக்கியப் போட்டியில் மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் ஆறுதல் பரிசுகளை வென்றுள்ளார்கள் என்ற அறிவித்தலை மேற்படி சஞ்சிகையின் பெப்ரவரி மாத இதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மேற்படி ஞானம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களின் 80வது அகவையை முன்னிட்டு நடத்தப்பெற்ற இந்த மாபெரும் இலக்கியப் போட்டியில் நாவல். சிறுகதை. கவிதை.கட்டுரை. மற்றும் சிற்றிதழ் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பெற்றன.
போட்டிகளுக்கு மேற்ச் சொல்லப்பெற்ற பிரிவுகளில் வெளியான நூல்கள் மாத்திரம் தெரிவிற்காக அனுப்பப்பெற வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு இணங்க உலகின் பல நாடுகளிலிருந்தும் நூல்கள் பல அனுப்பி வைக்கப்பெற்றன.
மேற்படி இலக்கியப் போட்டிகளில் கட்டுரை நூல்களுக்கான பிரிவில் கனடா வாழ் எழுத்தாளர்களான சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் அவர்களின்’சிந்தனைப் பூக்கள்’ நூலிற்கும் உதயன்பிரதம ஆசிரியரும் எழுத்தாளருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் எழுதிய ‘.இதுவரை’ நூலிற்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பெற்றுள்ளன.
இந்த இலக்கியப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை இலங்கை ரூபாய்கள்325.000 என்பதும் பரிசளிப்பு வைபவம் 12-03-2022 அன்று சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பெற்றுள்ளது.