போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பெருமளவான அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த நான்கு (4) நாட்களாக சுப்பர்மடம் பகுதியில் கடற் தொழிலாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (3) மாலை தடை விதித்துள்ளது.
தற்போது நீதிமன்ற கட்டளையுடன் அந்த பகுதிக்கு வந்த பொலிஸார் தடை உத்தரவு தொடர்பான கட்டளையை வாசித்துள்ள தோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.