கனடா ‘கைலாசா’ அமைப்பு நடத்திய தமிழர் மரபுரிமை மாத வைபவத்தில் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் தெரிவிப்பு
ஆதிகால தமிழ் இந்து கலாச்சாரமானது மருத்துவம், சுகாதாரம், நடனம், இசை, கலை, உடை உணவு போன்ற பல்துறைசார் விடையங்களில் தமிழ்க் கலாச்சாரம் எவ்வாறு இருந்திருக்கின்றது என்பதையும் பூமிக்கு எவ்வாறான வழங்கல்களை அளித்திருக்கின்றது அத்துடன் தமிழ் இந்து கலாச்சாரமானது இயற்கை விதிகளுடன் சீராக இணைந்திருந்தது- தமிழ் இந்து கலாச்சாரமானது மிகவும் கட்டமைக்கப்பட்டதாகவும் ஆன்மீகத் துறை, கோவில்கள் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் அனைத்தும் விழிப்புணர்வுடன் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அன்று தொட்டு அமைந்திருந்திருக்கின்றது.”
இவ்வாறு கடந்த வாரம் கனடா ‘கைலாசா’ அமைப்பு நடத்திய தமிழர் மரபுரிமை மாத கொண்டாட்டத்தில் ஆசியுரை வழங்கியபோது ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் தெரிவித்தார்.
இணையவழி ஊடாக நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். “தமிழ் இந்து கலாச்சாரமானது பரமசிவனால் நேரடியாக பரிசளிக்கப்பட்டிருக்கின்றது -பரமசிவனே இறையனார் சுந்தரேஸ்வரராக நிஜ அவதாரம் தாங்கி வந்து தமிழ் இந்து கலாச்சாரத்தை வழங்கியிருக்கின்றது-இந்தச் சமுக அமைப்பை சுந்தரேஸ்வரப் பெருமான் ஞானத்தை மைய்யமாகக் கொண்ட வாழ்க்கை முறையாக வழங்கியிருக்கிறார்.
இன்னும் இறையனார் முக்கிய 3 விடையங்களை வழங்கியுள்ளார்;. இதில் ஒன்று தமிழ் மொழி. அதில் மனிதர்கள் தங்களோடு உரையாடுவதற்காக அமைந்த மொழி தமிழ் எனவும், வேறு லோகங்களிலிருக்கும் உயிரினங்களுடன் உரையாடுவதற்காக மலர்ந்திட்ட மொழி சமஸ்கிருதம் எனவும், அன்றைய வாழ்க்கை முறையானது மனிதர்கள் வேண்டும்போது வேறுலோகங்களுக்குச் சென்றுவருவது அன்றாட வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கின்றது. ஆனால் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக நாம் இந்த அறிவியலை இழந்துவிட்டோம். இந்தத் தொடர்பானது முறிந்துவிட்டதனால் நாம் அந்த வேற்று மண்டல உயிரினங்களை அந்நியர்களாகக் கருதுகின்றோம்.
இவைகள் இரண்டுமே தமிழி என்பதிலிருந்து தோற்றம் பெற்றன எனவும் தமிழி என்பது ஒரு மொழியல்ல அது ஒரு கலாச்சாரம் என்பதையும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்-
அவற்றை வடித்து வைப்பதற்காக வரிவடிவு கொண்ட வட்டெழுத்து முறை கிரந்தம். வேற்று மண்டலங்களில் இருக்கின்ற தேவர்கள், சித்தர்கள், கணங்கள், முனிகள், இவர்களோடெல்லாம் உரையாடவும், உணர்வாடவும் தொடர்பிலிருக்கவும் மலர்ந்திட்ட தமிழின் ஒரு பாகமே இன்றைய சமஸ்கிருதம். இந்த மூன்றையும் உள்ளடக்கியதே தமிழி. தமிழ்கலாச்சாரத்தின் நீங்கள் புரிந்துகொண்டால்தான் தமிழ் மொழியின் வரைவிலக்கணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இதனால்தான் இன்றை நவின உலகில் தமிழ் கலாச்சாரத்தை மிகவும் விரும்புவோர்கள் தமிழா? சமஸ்கிருதமா? என்ற கேள்விகளுக்குள் சிக்தித் தவிக்கின்றார்கள். எது பழைய மொழி? தமிழா சமஸ்கிருதமா?. எது உயர்ந்து?. இந்த வகையில் தமிழ் மொழியை உபயோகித்து தமிழ் கலாச்சாரத்தை அழிக்கின்றார்கள். துரதிஸ்டமாக இவ்வாறு தமிழர்களுக்கு நடக்கின்றது. புரியாத மக்கள் தமிழ் மொழியைப் பாவித்துத் தமிழ்கலாச்சாரத்தை அழிக்கின்றார்கள். இவ்வாறு தமிழ் கலாச்சாரமானது படுகொலை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள நூல்நிலையமானது முற்றாக எரிக்கப்பட்டபோது 97 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களும் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் எரிந்து சாம்பலாயின. இது 20ம் நூற்றாண்டில் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக நடந்த வன்முறைக்குச் சிறந்த உதாரணம் ஆகும். அத்துடன் கைலாச தேசமானது உருவாக்கப்பட்டது தமிழ் இந்து கலாச்சாரத்தைப் புனரமைப்பதற்காகவே என்பதும் எம்மால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்-“ என்றும் அவர் தெரிவித்தார்
இந்த விழா தை மாதம் 29ம் திகதி ரொறன்ரோவில் நடத்தப்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் பெண் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு துறைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களும் இந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்திருக்கின்றார்கள்.
இந்த விழாவினை ஸ்ரீ கைலாசா பெண் அதிகாரமும் ஆண்பெண் சமத்துவம் பிரிவானது கனடா கைலாசத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல அரசியல் பிரபலங்கள் கலைஞர்கள் தொழில்விற்பன்னர்கள் போன்ற பலருமாக 6 நாடுகளில் இருந்து கொண்டாடியிருக்கிறார்கள்.
தமிழ்தாய் வாழ்த்துப் பாவுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஆதிகால ஞானமடைந்த தமிழ் காலச்சார வாழ்க்கைமுறையும் தமிழ் சமுகமானது இந்த உலகிற்கு வழங்கிய பங்களிப்புப் பற்றியும் நினைவு கூரப்பட்டது. அத்துடன் 5 தனித்துவமான துறைகளில் சாதனைபடைத்த 22 தமிழ் பெண்சாதனையாளர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சர்வதேச நித்தியானந்த தொலைக்காட்சியயூடாக உலகம் எங்கும் பரவலாக வாழும் இந்துக்கள் இந்த நாளைப் பெருமையுடன் கொண்டாடியிருக்கிறார்கள். சர்வதேசரீதியாக பார்வையாளர்களும், அரசியல் பிரமுகர்களும் தத்தமது ஆதரவினைத் தெரிவித்ததுடன் பாராட்டியும் உள்ளனர். பகவான் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் ஆதிகால தமிழ் இந்து கலாச்சார வாழ்க்கை முறையானது உணர்வை மையமாகக் கொண்டிருந்தது என்பதை தெளிவாக விளக்கியமை விழாவிற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது.
நிகழ்வில் பகவான் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் கலந்து சாதனையாளர்களை வாழ்த்தியதுடன், அனைவரையும் ஆசீர்வதித்துச் சென்றார். அத்துடன் தமிழ் இந்து கலாச்சாரமானது எவ்வாறு உணர்வு மையமாக வாழ்ந்திருக்கின்றது என்பதை அழகாக தமிழில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
பல நாடுகளில் வாழும் பின்வரும் பெண்மணிகள் சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்கள்:-
‘தேவி மீனாட்சி நிர்வாகம்;’ விருது ஒன்றாரியோவைச் சேரந்த மல்லிகா வில்சன் அவர்களுக்கும். தேவி காமாட்சி உலக சமாதானம் எனும் விருது ஒன்றாரியோவைச் சேரந்த சரிக்கா நவநாதனுக்கும் தேவி மாரியம்மன் உடல் நல விஞ்ஞானம் எனும் விருதுஇலங்கையைச் சேர்ந்த டாக்டர் கவிசங்கரி ஜெயலோகேந்திரன் தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஜமுனா கிருஸ்ணராஜிற்கும் தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது இலங்கையைச் சேரந்த இந்துகதேவி கணேஸ்சிற்கும் தேவி மீனாட்சி நிர்வாகம் எனும் விருது கனடா பிக்கறிங்கைச்; சேர்ந்த கஜனிபாரதா சசிகுமார் தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது சிறிலங்காவைச் சேரந்த அருளேஸ்வரி வேதநாயகம். தேவி அன்னபூூரணேஸ்வரி மனிதாபிமானம் விருது இலங்கையைச் சேரந்த சஜிராணி என்பவருக்கும் தேவி காமாட்சி உலக சமாதானம் எனும் விருது சிறிலங்காவைச் சேரந்த நிவேதா ஞானப்பிரகாசம் தேவி மீனாட்சி நிர்வாகம் எனும் விருது இலங்கை நுவரேலியாவைச் சேர்ந்த யதர்ஜணா புத்திரசிகாமணி என்பவருக்கும்தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது கனடா ரொறன்ரோ ஒன்றாரியோவைச் சேரந்த மீனா தவரட்னம் என்பவருக்கும் தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது இலங்கை மட்டக்களப்பினைச் சேர்ந்த மிதுனா தயாளன் தேவி மீனாட்சி நிர்வாகம் எனும் விருது இலங்கையைச் சேர்ந்த தேவப்பிரியா தேவி காமாட்சி உலக சமாதானம் எனும் விருது நியுசிலாந்தைச் சேர்ந்த காயத்திரி திவகலாலா .தேவி சரஸ்வதி கலை கலாச்சார இந்தியாவைச் சேரந்த என் கே கேமலதா தேவி மாரியம்மன் உடல் நல விஞ்ஞானம் எனும் விருது இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் புஸ்கலா தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது இலங்கையைச சேர்ந்த செல்வி றஞ்சனி நடராஜா தேவி காமாட்சி உலக சமாதானம் எனும் விருது இந்தியா சென்னையைச் சேர்ந்த எஸ் றாதா தேவர் தேவி சரஸ்வதி கலை கலாச்சார விருது டாக்டர்; இ சுதா தேவி காமாட்சி உலக சமாதானம் எனும் விருது இந்தியாவைச் சேர்ந்த இந்துமதி ஜே சி தேவி மாரியம்மன் உடல் நல விஞ்ஞானம் எனும் விருது இலங்கையைச சேர்ந்த புவனலோஜினி ஜீவநாதன் தேவி அன்னபூூரணேஸ்வரி மனிதாபிமானம் விருது இலங்கையைச் சேர்ந்த சிவஜோதி ஆகிய 22 பெண்சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்த பிரபலங்கள் பின்வருமாறு. பல அரசியல் பிரபலங்கள் நேரில் கலந்து சிறப்பித்தவுடன் நிகழ்வினைப் பாராட்டியுமுள்ளனர்.
இறுதியில் பகவான் நித்தியானந்த பரமசிவம் அவர்களின் ஆசீர்வாதத்துடன் நிகழ்வு இனிது முற்றுப் பெற்றது.