ஓன்றாரியோ மாகாணத்தில் போக்குவரத்து தொடர்பான அரச நிறுவனங்களை நிர்வகித்து வரும் Metrolinx நிறுவனத்தின் உப-தலைவர் என்னும் முகாமைப் பதவியிலிருந்த ஒருவருக்குச் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கே நிறுவனத்தின் மில்லியன் டாலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளுத என்றும் இது தொடர்பாக ஒன்றாரியோ கணக்காய்வாய்வாளர் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது
பொது நிதியுதவி பெற்ற ஒன்டாரியோ கிரவுன் நிறுவனமான Metrolinx ரொறன்ரோ பெரும்பாகம் முழுவதும் பெரிய போக்குவரத்துத் திட்டங்களை வழங்குவதற்குப் பொறுப்பேற்று, தனியார் துறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய தகமைகளைக் கொண்டவர்களின் சேவைகளை வழங்குவதற்கு நிறுவனத்திற்குள் ஆலோசகர்களை நியமிப்பது வழக்கம் என்று கருதப்படுகின்ற இந்த வேளையில் இவ்வாறான ஓரு முறைகேடு இடம் பெற்றிருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஒன்றாரியோ கணக்காய்வாளர் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“வழக்கமாக ஒப்பந்ததாரர்கள் நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதில்லை – இந்த சூழ்நிலை தனித்தன்மை வாய்ந்தது மற்றும் தற்காலிகமானது” என்று மாகாண சுரங்கப்பாதை திட்டத்தில் பணியாற்றி வரும் ஓரு பொறியியல் முகாமையாளர் ஜெக் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மற்றுமொரு Metrolinx நிர்வாக அதிகாரி Metrolinx தனது நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்குவதில் எந்த செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை, மேலும் குறிப்பிட்ட நபர் நிறுவனத்தில் துணைத் தலைவர் பதவிகளை வகித்திருந்தாலும், Metrolinx இலிருந்து நேரடியாக சம்பளம் பெறவில்லை என்றும் பொது நிறுவனம் மற்றும் அவரது தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பான விசாசரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அறியப்படுகின்றது.