(4-02-2022)
இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.செயோன்ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.