அப்படி என்ன சிறீதரன் பேசியுள்ளார். வழமைபோல் சிறீலங்கா அரசு தமிழர் தாயத்தில் பௌத்த விகாரைகளை அமைத்து வருகிறது என்று சிறிதரன் முழங்கியுள்ளாராம் அது சரி இதற்கு ஏன் குரங்கார் சிரிக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆயிரம் பெளத்த விகாரைகளை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்திற்கு மாவட்ட அபிவிரித்திக் குழு தலைவர் பதவிக்காக தனது கைகளை உயர்த்தி ஆதரவளித்த வர்களில் சிறீதரனும் ஒருவர்.
சிறீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவளித்து சட்ட ரீதியாக அங்கிகரித்த பௌத்த விகாரைகளையே தற்போது ராஜபக்சவினர் தமிழர் தாயகம் எங்கும் கட்டமைத்து வருகின்றனர் சிறீதரன் உள்ளிட்ட கூட்டமைப் பினரின் துரோகங்களை தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதையும், சிறீதரன் தமிழ்த் தேசியம் என்ற வேடமணிந்த அரங்கேற்றும் துரோகங்களையும் நினைத்த போது குரங்காரால் சிரிப்பை அடக்கமுடியவில்லையாம்….