இலங்கையின் நீதி அமைச்சர் வடக்கிற்கு சென்று காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தாய்மார் கேட்கின்றனர். ஒரு இலட்சம் ரூபா வழங்கி ஜெனீவா பிரச்சினையை தீர்க்க முடியாது.
இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள்.
அவர் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது
எந்த தவறும் செய்யாத தமிழ் முஸ்லிம்இளைஞர்கள் சிறையில் உள்ளனர். ஆனால். பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைதான ஹிஜாஜ் ஹிஸ்புல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றோம். பயங்காரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக எமது கட்சி நாடுபூராவும் சென்று மக்களை அறிவூட்ட இருக்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாடு கோரவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான தீர்வு வழங்குமாறே கோருகிறோம் இலங்கை அரசின் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு காணப்படுகிறது. தோட்டப்பகுதி மக்களுக்கு கோதுமை மா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் கோதுமை மா இன்றி கஷ்டப்படுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட டோலர் படகுகளை தடுக்குமாறு வடபகுதி மீனவர்கள் கோருகின்றனர். வெளிநாட்டு மீனவர்கள் 300 கிலோமீற்றர் தொலைவில் மீன்பிடிக்கின்றனர். ஆனால் அரசு அதனை தடுக்கவில்லை. எமது பிரதேசங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொள்ளும் அநியாயங்களை நிறுத்த வேண்டும். 30-, 40 வருடங்கள் பயிரிட்ட காணிகளை பலாத்காரமாக பெற்றுள்ளளனர். தொல்பெருள் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் மட்டக்களப்பில் கோயிலுக்கு சொந்தமான காணியில் நிர்மாணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அரசின் செயற்பாடுகளில் நிறையவே முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் குறுந்தூர்மலையில் பாரிய நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமாக செயற்படுகின்றன. நாம் தனிநாடு கோரவில்லை. நாட்டை துண்டாட கோரவில்லை. எங்கள் நோக்கம் அதுவல்ல” என்றார்.