நாடு எந்த திசையில் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர். அப்படியான கடிதம் கிடைக்கவில்லை என்று நாணய நிதியம் கூறுகிறது. இது என்ன ஒரு கேலிக்கூத்து, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கதி. முற்றாக நாடு சீரழிந்துள்ளது. நாங்கள் எதிர்காலத்தில் அமைக்கப்போகின்ற அரசாங்கம் தற்போதையது போன்று “அச்சாறு” அரசாங்கமாக இருக்காது என்றார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச .
கொழும்பு – கொட்டாவை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாடு எந்த திசையை நோக்கி பயணிக்கின்றது என்பது அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கும் தெரியாமல் உள்ளத. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது குறித்து அரசாங்கத்தில் இருப்போர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.