எமது தாய் மண்ணிலிருந்து தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளால் இடம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் ‘புலம் ‘பெயர்ந்து வாழ்ந்தாலும் ‘உளம்’ பெயர்ந்து வாழவில்லை என்பதற்கு உதாரணமாக பல விடயங்களை நாம் பகிர்ந்துகொள்ளலாம்.
அவற்றில் ஒன்று தான் எமது பாரம்பரிய தமிழர் விழாவாகவும் எமது பண்பாட்டுக் கோலங்களில் ஒன்றாகவும் எமது இனத்தின் அடையாளமாகவும் விளங்கும் ‘பொங்கல் விழா’ தை மாதத்தில் இந்த ‘பொங்கல் விழா’ இடம்பெறுவதன் காரணமாக கனடாவில் தை மாதமானது ‘தமிழர் மரபுரிமை மாதம் ‘ என்று அங்கீகரிக்கப்பெற்றுள்ளது.
இது ஒரு சாதாரணமாக அங்கீகாரம் அல்ல.
கனடாவின் மத்திய மாகாண உள்ளாட்சி அமைப்புக்களான மாநகர சபைகள் என கனடாவின் 3 வகையான அரசாங்கங்ககள் அங்கீகரித்துள்ளன.
இந்த அங்கீகாரத்தை எமது சமூகம் பெற்றுக்கொள்வதற்கு அயராது உழைத்த அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த வரிசையில் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பெற்ற இந்த பொங்கல் விழாவும். ‘தமிழர் மரபுரிமை நாளும்’ தமிழர் அமைப்புக்களால் கொண்டாடப்படுவதற்கு ‘கொரோனா’ என்னும் கொடிய நோய் தடையாக அமைந்துவிட்டது.
ஆனாலும் நாம் இங்கு படங்களில் காணும் கனடா -ஸ்காபுறோ ‘சப்த சாகரம்’ நண்பர்கள் குழு நடத்திய ‘பொங்கல் விழா’ கனடாவில் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஒரு விழாவாக கணிக்கப்பெறுகின்றது.
இந்த ‘சப்த சாகரம்’ நண்பர்கள் குழுவில் இங்குள்ள வர்த்தக மற்றும் சமூகம். சமயம் சார்ந்த அமைப்புக்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர்களாக விளங்கும் திருவாளர்கள் கல்யாணசுந்தரன், ஜெயம் கனகசபை. கிருஸ்ணகோபால் செல்லத்துரை. கேதா நடராசா. கருணா நந்தன். குலசிங்கம், திருமதி பிரியா, திருமதி வசந்த தீபா ஆகியோர் அங்கம் வகிக்கின்றார்கள்.
பல்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து பொங்கல் விழாவை நடத்த நிதி உதவிகளைப் பெறும் அமைப்புக்கள் கூட. இணையவழி ஊடாக பொங்கல் விழாவை நடத்திய பின்னர் ஓய்ந்திருக்கும் வேளையில் ‘சப்த சாகரம்’ நண்பர்கள் குழு நடத்திய ‘பொங்கல் விழா மிகவும் அழகுறவும் எழுச்சியுடனும் நடைபெற்றுள்ளது.
கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘குயின்பெலஸ் விழா மண்டபத்தில்’ நடைபெற்ற இந்த விழாவில் ‘கனடா உதயன்’ உட்பட ஊடக நண்பர்கள் சிலரும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
இங்கு காணப்படும் படங்களில் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
SATHIYAN–