ஸ்காபுறோவில் இயங்கும் Frontline Community Centre. சேவை வழங்கும் அமைப்பிற்கு ஒன்றாரியோ அரசின் நிதி உதவி
கனடா- ஸ்காபுறோவில் நீண்ட காலமாக இயங்கிவரும் Frontline Community Centre. சேவை வழங்கும் அமைப்பிற்கு ஒன்றாரியோ அரசின் நிதி உதவித் தொகையை ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் நலன் பேணும் விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ றேமண்ட் சோ அவர்கள் அண்மையில் நேரடியாக வழங்கினார்.
இதற்கா அறிவிப்பை தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார்.
அன்றைய தினம் ஸ்காபுறோவில் Frontline Community Centre. சேவை வழங்கும் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் திருமதி விஜயா குலா மற்றும் அவர்களது அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மிகவும் சிறப்பாக முறையில் வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அமைச்சர் கௌரவ றேமண்ட் சோ அவர்ளுடன் தமிழ் பேசும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான லோகன் கணபதி. விஜய் தணிகாசலம் மற்றும் ஆர்மேனியன் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு அரிஸ் பாபிகியன் ஆகியோர் மாகாண அரசின் சார்பில் சமூகமளித்திருந்தனர்.
◌மாகாண அரசின் பிரதிநிதிகளான அவர்கள் அனைவரும் Frontline Community Centre. சேவை வழங்கும் அமைப்பின் சேவைகளையும் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் திருமதி விஜயா குலா அவர்களது நிர்வாகத்திறன் தொடர்பாகவும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
Frontline Community Centre. அமைப்பின் சேவைகள் மூலம், தமிழ் பேசும் முதியோர்கள் மாத்திரமல்ல வேற்று இனத்தவர்களும் பயன்பெறுகின்றார்கள் என்றும் குறிப்பாக முதிர்ந்த ஆண்கள் பெண்கள் ஆகியோர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் அவர்கள் பெற்றுவருகின்றார்கள் என்பதை மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிந்துவைத்துள்ளார்கள் என்பதை அவர்களது உரைகளிலிருந்து நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது
செய்தி- சத்தியன்-