யா/ தாவளை சைவத் தமிழ் வித்தியாலய திறன் வகுப்பறை திறப்பு விழா 09.02.2022 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அதிபர் திருமதி. சி. சுக்திநாதன் தலைமையில் இடம் பெற்றது. திறன் வகுப்பறைக்கான பெயர்ப் பலகையினை பிரதம விருந்தினரான வலிகாம கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. பொ. ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். லயன். முா. தவக்குமரன் நாடாவினை வெட்டி திறன் வகுப்பறையினை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து பிரதம விருந்தினர் தனது உரையில் திறன் வகுப்பறையின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டதுடன் திறன் வகுப்பறைக் கற்பித்தல் ஊடாக மாணவர் சேர்வு ஜதம், வரவு ஜதம் என்பவற்றை அதிகரிக்க முடியும். குறித்த பிரதேச மாணவர்களை பயனுறுதி வாய்ந்த திறன் வகுப்பறைக் கற்பித்தல் மூலம் கவர்ந்து இழுக்க முடியும் என்ற கருத்தினையும் வலியுறுத்தினார். மேலும் அதிபர் தன் தலைமை உரையில் திறன் வகுப்பறை பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இதனை நாம் சிறப்பான முறையில் வினைத்திறனாகப் பயன்படுத்தி மாணவரின் கற்றல் பெறுபேற்றில் பாரிய மாற்றத்தினையும் மாணவர்களை கவருகின்ற இடமாக பாடசாலையினை மாற்ற முடியும் என கூறினார்.
அத்துடன் இத்திறன் வகுப்பறைக்கான முழுமையான முழு நிதிப்பங்களிப்பினையும் வழங்கிய கலாநிதி நித்தியானந்தம் ஐயா அவர்களுக்கும் ரட்ணம் அறக்கட்டளைக்கும் பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுடைய சேவை தொடர்ந்தும் பாடசாலைக்கு கிடைக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. சூ. நோபேட் உதயகுமார், வள்ளுவர் இல்ல செல்வி. கானப்பிரியா கலந்து கொண்டதுடன் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.