மன்னார் நிருபர்
13-02-2022
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் பிராந்திய காரியாலயத்தின் விசாரணை அதிகாரியாகவும் அண்மையில் பதவி உயர்வு பெற்று திருகோணமலை மாவட்ட மனித உரிமை குழுவின் பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றி வருகின்ற சட்டத்தரணி வசந்த ராஜா தனது உயர்கல்வி நடவடிக்கைக்காக இத்தாலி பவியா பல்கலைக்கழகம் (university de pavia) நோக்கி பயணமாக உள்ளார்.
இந்த நிலையில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள்,ஊடகவியளாலர்கள் இணைந்து இன்றைய தினம் (13) மன்னார் நகரில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரிவு உபசார நிகழ்வு ஒன்றை ஒழுங்குபடுத்தி இருந்தனர்.
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி வசந்தராஜா கெளரவிக்கப்பட்டது டன் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகளால் நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
சட்டத்தரணி வசந்தராஜ கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார்,வவுனியா முல்லைத்தீவு பகுதிகளில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியிலேயே மன்னாரில் உப அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது என்பதுடன் அவரது காலப்பகுதியில் பல வருடங்களாக தீர்க்கப்படாத மனித உரிமை முறைப்பாடுகளுக்கு சுமுகமான தீர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.