(மன்னார் நிருபர்)
14-02-2022
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் பணிமனையின் புதிய உதவிப் பணிப்பாளராக ரி.பூலோக ராஜா இன்று (14) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்
1998 ஆண்டு தொடக்கம் மன்னார் இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாகவும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாகவும் பணிபுரிந்த நிலையில் பதவி உயர்வு பெற்று இன்றைய தினம் உதவிப் பணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார்.
குறித்த பதவி பிரமாண நிகழ்வு இன்றைய தினம் மத தலைவர்களின் நல்லாசியுடன் இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச,மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.