(15-02-2022)
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று கொழும்பு புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் முதலாவது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த போராட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டி ருந்ததோடு கிழக்கு மாகாணத்திற்கும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் இன்று காலையிலிருந்து இந்தக் கையெழுத்து பெறும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும் என சர்வஜன நீதி அமைப்பு தெரிவித்துள்ளது.