கடந்தவாரம் ‘உதயன்’ வார, தழின் செய்தியாளர்கள் குழுவினருடன் கியூபெக் மாநிலத்தின் முக்கிய வரலாற்று நகரங்களில் ஒன்றான Trois – Rivieres நகருக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அன்று ஒரு ஞாயிறுதினம். விடுமுறைநாள்.
ஆனால் உல்லாசமாகவோ – உற்சாகமாகவோ பயணிப்பதற்குக் கவர்த்தியநிலை சாதகமாக அமையவில்லை. காற்று வீச்சுடன் 27oC அல்லது 300C குளிர் வெப்ப நிலையை உணர்ந்தோம். சுமார் இரண்டு மணிநேரப் பயணத்தின் பின் கியூபெக் மாநில (Maurice Region) Reginal தலைநகரமாகிய Trois -Rivieres (தமிழில் “மூன்று நதிகள்” கூடும் இடம் என்று பொருளாகும் நகரைச் சென்றடைந்தோம்.
இந்தியாவில் அலகாயத் மாநிலத்தில் ஓடுகின்ற புனித கங்கா -ஜமுனா – சரஸ்வதி நதிகள் மூன்றும் சங்கமிப்பது போன்று நமது கியூபெக் மாநில நகரமாகிய “துரு – ரிவரெஸ்” (மூன்று நதிகள்) கூடும் “திரிவேணிசங்கமம்” என்று மொழிபெயர்ந்து நினைவு கொள்வோம். Trois – Rivieres நகரின் வரலாற்றுச் சிறப்புக்களையும் முக்கியத்துவத்தையும் சிறிது கவனித்தோமானால்…
கியூபெக் மாநிலமேற்குக் கரைவாயிலில் ஓடும் Maurice நதிக்கும் -மொன்றியல், கியூபெக் நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் துறைமுகநகரமாகும். 1760ஆம் ஆண்டு 586 பிரஞ்சுக் குடிமக்களுடன் உதயமான இந்நகரம் (கனேடிய) கியூபெக் மாநிலத்தில் இயற்கை வளங்களை உள்ளடக்கியும் பொருளாதார வளர்ச்சிக்கும் – ஏற்றுமதிக்கும் முக்கிய பங்கு வகித்த துறைமுக நகராகும். இங்கு ஓடிச் செல்லும் சென்ற் – லோரன்ஸ் நதி வர்த்தகக் கப்பலை போக்குவரத்துக்கு பெரும்பங்கு வகித்து வருகிறது.
1850 ஆரம்பகாலங்களில் Trois – Rivieres நதி நகரம் (கனடா) கியூபெக் மாநில நிர்வாக தலைமையகமாகவும், பலமரம் அரியும் பாாிய (Saw mills) தொழிற்சாலைகளையும் – பெரு மரப்பலகை – மரங்களை ஏற்றுமதி செய்யும்இடமாகவும் விளங்கியது.
மரங்களை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்தி தொழிற்சாலைகள் கனடிய பொருளாதார வளத்தைப் பலப்படுத்தின.
நீர் மின்சார உற்பத்தியிலும் (Hydro electric Power) முன்னிலை வகித்தது. 1908ல் ஏற்பட்ட பெருந்தீ விபத்தில் பலத்த சேதம் உண்டாகி தீயினால் நகரம் அழிந்தது. 1816இல் கட்டபெற்ற சிறைச்சாலை 19ஆம் நூற்றாண்டின் கலையம்சம் மிகுந்த கட்டிடங்கள் 1856ஆம் ஆண்டு கட்டப்பெற்ற பழைய தேவாலயம் ஆகியன தீயிலிருந்து தப்பியது.
இன்றும் இந்நகரம்பழைக்கும் – புதுமைக்கும் பாலம் அமைக்கும் கலை – கலாச்சார – சங்கீத இசை அரங்குகள் – விளையாட்டு கேளிக்கைகள்- Grand Prix எனப்படும் விரைவு மோட்டார் வண்டிப் பந்தயங்கள் இரவு நேர உல்லாச நடன விடுதிகள் என சுற்றுலாப் பயணிகளை ஆண்டுதோறும் கவர்ந்திழுக்கும் தேனிலவு நகரமாகும்.
Trois -Rivieres நகர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியாகும் Fur எனப்படும் விலையுயர்ந்த மிருகங்களின் தோலினாலான பெண்களுக்கான ஆடம்பர குளிராடைகள் – உலகின் பல்வேறு நாட்டு சீமாட்டிகளின் – ஹலிவூட் நடிகைகளின் மேனியில் தவழ்வது யாவரும் அறிந்த Fashion உலக செய்தியாகும்.
வருகின்ற Coronafree கோடைகால விடுமுறையில் மீண்டும் “திரிவேணி” சங்க நகருக்குப் பயணம் செய்து சில இரவுகளை உல்லாசமாகவும் – உற்சாகமாகவும் கழிக்கலாம் எனக் கணவு காண்கின்றேன் கனவு மெய்ப்பட வேண்டும்.
வீணை மைந்தன் மற்றும் கணேஸ்