(17-02-2022)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் ரீதியான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.
ராமநாயக்க இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை இன்று அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அந்த அரசாங்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.