ஓர் அதிகாரம், ஒரு கவிஞர்; ஓர் மரபுக்கவி படைத்து 133 அதிகாரம், 133 கவிஞர், 133 மரபுக் கவிதை என்ற தலைப்பிட்ட சாதனை நிகழ்வு 12 – 02 – 2022 அன்று இலங்கை, இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகித், தொடர்ந்து மறுநாள் வரை உலகிலுள்ள பன்னாட்டுத் தமிழ்ப் புலவர்கள், பாவலர்கள், கவிஞர்கள் ஒன்று கூடி ஐயன் வள்ளுவப் பெருந்தகைக்கு மரபுக் கவிதை கொண்டு இரவு பகலாயத் தேம்பா மாலையாம் பா மாலை சூட்டி மகிழ்ந்த நாள்.
மொத்தம் 15 மணி நேரம் தொடர்ச்சியான கவியரங்கம் இந்த உலகச் சாதனை நிகழ்வை உலக சாதனையாளர், பேரா. சே. பானு ரேகா. தமிழ்நாடு, பாடலாசிரியர, அகணி சுரேஸ, கனடா ஆகிய இருவரும் இணைந்து மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் இந்நிகழ்வின் நிகழச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து திறம்பட நடத்தி முடித்தனர்.
பன்னாட்டு திருக்குறள் மரபுக் கவிதை அமைப்பு, தமிழ் மகள் இலக்கிய அமைப்பு, மல்ரி சிமாட் சொலுஷன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் இணைந்து வழங்கிய உலக சாதனை நிகழ்ச்சி. உலகச் சாதனையாளர் சான்றிதழ் வாங்குபவராக உலக சாதனையாளர் முனைவர். வெங்கடேசன் அவர்களும், இணைய இணைப்பினை உலகச் சாதனையாளர் ஜோதி மீனாட்சி வழங்கியும், கண்காணிப்பாளராக உலகச் சாதனையாளர் புஷ்பா கிறிஸ்டி அவர்களும் பங்காற்றினார்கள்.
இவர்களால் உலகளவில் உள்ள மக்கள் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திட அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுத், தமிழர் பண்பாட்டோடு தமிழ்த்தாய் வாழ்த்து ஆடல் பாடல் அணிசெய்ய இனிதே சாதனைத் திரை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து சே.ஜீவிதா (கல்லூரி மாணவி) அவர்களாலும், திருக்குறள் வாழ்த்து மயூரி (கல்லூரி மாணவி) அவர்களாலும் , கடவுள் வாழ்த்து கவிஞர் தேசபாரதி ராஜலிங்கம் வேலாயுதர் அவர்களாலும் வழங்கப்பட்டன. திருக்குறள் பாடலுக்கான வரவேற்பு நடனம் காணொளியாக விரிந்தது.
வரவேற்புரையை இலக்கிய மாமணி பேராசிரியர் சே. பானுரேகா அவர்கள் வழங்கினார். செம்மொழி விருதாளர் அருள்.திரு. திருக்குறள் தூயர், முனைவர். பேராசிரியர் கு.மோகனராசு அவர்கள் தலைமையுரை வழங்கினார். முன்னிலை உரையை ஞானப் பீட விருதாளர். கவிமாமணி. முனைவர் குமரிச் செழியன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் டில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சர்மா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
பேராசிரியர். முனைவர். பாலசுந்தரம் இளையதம்பி தமிழ்த்துறை, அண்ணாமலைக் கனடா வளாகம். அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. அடுத்து முனைவர், பேராசிரியர், சந்திரபோஸ் (அப்துல் கலாம் விருதாளர், கல்லூரி முதல்வர் ஓய்வு) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், உலக சாதனையாளர் கவிஞர் சரவணன், தமிழ்ப்பூங்கா அதிபர் யோகா அருள்சுப்பிரமணியம், கனடா தமிழ்க் கவிஞர் கழகத் தலைவர் கந்த ஸ்ரீ பஞ்சநாதன் ஆகியோரும் வாழ்த்துரைகளை வழங்கினார். கவியரங்கு தொடக்கவுரையை கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் வழங்கினார்.
புலவர்கள் கவியுரைக்க, வித்தகர்கள் வாழ்த்துரைக்க பகலோன் முன் ஆரம்பமான சாதனையரங்கு, அவன் மங்கி மறைந்த போதும் சோராமால், வெள்ளி நிலா பவனிவரத் தாரகைத் தோழியர் கண்சிமிட்ட விடி வெள்ளி முளைத்தும் சோராமல் மீண்டும் வந்தான் கதிரோன்.
கண்ணுறக்க மற்றும் கவிஞர்கள் கவி சொல்லச் சோரவில்லை. புத்துணர்வில் பொங்கிய தமிழ் ஆர்வம். பதினெண்கீழ்க் கணக்கில் அடங்கியுள்ள முப்பால் என்னும் திருக்குறள் ~அகரம் முதல | என ஆரம்பித்து 1330 குறள்களை, 133 அதிகாரங்கள் மூலம் பல நூறு வருடங்களுக்கு முன்னரே மக்கள் தங்கள் வாழ்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனைத் தெளிவாகத் தந்துள்ளார் திருவள்ளுவர். இவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கருதுகிறார்கள். ரடிகளில் உலகின் தத்துவத்தைக் கூறி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என வகைப் படுத்தியதை 133 புலவர்கள் 133 மரபுக் கவிதையில் பா புனைந்து அணிவித்தார்கள்.
இன்று சென்னையிலுள்ள முக்கியமான இடம் வள்ளுவ கோட்டம். இங்கு திருவள்ளுவருக்கு ஒரு மணி மண்டபம் உண்டு. அந்த மண்டபத்தில் அனைத்துக் குறள்களும் பதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது சிலையானது 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகுவாழ் தமிழ்க் கவிஞரும் ஒருங்கிணைந்து திருவள்ளுவருக்கு அவரது குறளை உள்வாங்கி மரபுக் கவிதையாக யாத்து உலக சாதனை படைத்துள்ளமை வரலாற்று உலக சாதனையாகும். இவ்வகைச் சாதனையால் புலவர்களை உலகறியச் செய்த செயல் மாண்புடையதாகும். அவர்களைப் போற்றி வாழ்த்துவோம்.
இந்நிகழ்வில் இந்தியா கனடா, இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, டென்மார்க், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கவிஞர்கள் பங்குபற்றித் தாம் தெரிவுசெய்த அதிகாரங்களிற்கான கவிதைகளைப் படித்து மகிழ்ந்தனர். குனடா நாட்டிலிருந்து 24 கவிஞர்கள் பங்கு பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாக் கவிஞர்கள் பங்குபற்றிய கவியரங்குகளை கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா, கவிஞர் அகணி சுரேஸ் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.
விழாவில் கவிஞர் முத்தரசன், கவிஞர் படைக்கலப் பாவலர், உலகத் திருக்குறள் மையம் சார்ந்த திரு குமரகுரு கணபதிப்பிள்ளை, மருத்துவர் செல்வி முருகேசன், பேராசிரியர் அரங்கராசன், முனைவர் லலிதா சுந்தரம், திருமதி கௌரி பாபு, பாவலர் புஸ்பா கிறிஸ்டி, முனைவர் ஜோதி மீனாட்சி ஆகியோரும் ஆல் இன்டியா ரைக்கோர்ட்ஸ் நிறுவனர் முனைவர் வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
கவிஞர் மேரி ஞானப்பிரகாசம் கனடா