கியுபெக் மாநிலத்தையும் ஒன்றாரியோ மாநிலத்தையும் பிரிக்கும் எல்லையில் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்திருக்கும் கோர்ன்வால் நகரத்தில் பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கனடாவின் மூத்த குடிகளான பழங்குடி சமூகத்தினரும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இங்கு வாழ்ந்த வண்ணம் ஏனைய சமூக மக்களோடு தொடர்புகளைக் கொண்டு வாழ்ந்தாலும் தனித்துவமான தமிழர் பண்பாடு கல்வி மற்றும் கலைகளில் ஈடுபாடு கொண்டு அவற்றையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழ் அமைப்புக்களையும்; நடத்திய வண்ணம் கல்வி நிறுவனங்களையும் வர்த்தக நிலையங்களையும் நடத்துகின்றவர்களாக எமது தமிழ் மக்கள் கோர்ன்வால் நகரில் வாழ்ந்து வருகின்றனர். அவர் அந்த நகரில் வாழும் சிறார்களின் தமிழ்க் கல்விக மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றிலும். ஈடுபாடு கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு பங்காற்றி வருகின்றனர்.
அங்கு வாழும் மக்களைச் சந்தித்து உரையாடி அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக உரையாடி தகவல்களைச் சேகரிப்பதற்காக ‘உதயன்’ செய்தியாளர்கள் குழு மற்றும் ‘ரூபம்’ இணைய ஊடகத்தின் செய்தியாளர்கள் குழு ஆகியவை இணைந்து கடந்த சனிக்கிழமையன்று கோர்ன்வால் நகருக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
அங்குள்ள தமிழ் மக்களையும் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இந்த சந்திப்பிற்காக அழைக்கவும் இணைக்கவும் சிலர் உதவியாக இருந்தனர். அவர்களில் கோர்ன்வால் நகரில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் நந்தகுமார் அவர்களும் அங்கு கல்வி நிறுவனத்தை நடத்திவரும் வஜீதன் அவர்களும் உதவியாக செயற்பட்டார்கள்.
வஜீதன் அவர்கள் நடத்திவரும் கல்வி நிலையமான இன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
சந்திப்பு வைபவத்தை கலாச்சார ரீதியாக ஆரம்பித்து வைக்கும் வகையில் செல்வன் இளவேந்தன் ஜெகனழகன் மற்றும் வெண்ணிலா ஜெகனழகன் ஆகியோர் தமிழ்த் தாய் வாழ்த்தை இசைத்தார்கள். தொடர்ந்து கனடிய தேசிய கீதத்தை செல்வன் வெற்றியழகன் ஜெகனழகன் இசைத்தார். அவர் புல்லாங்குழல் இசையையும் வழங்கினார்.
தொடர்ந்து பலர் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள்.
பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் உதயன் செய்தியாளர்கள் மற்றும் ‘ரூபம்’ செய்தியாளர்கள் ஆகியோர் தங்கள் விஜயத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்கள்.
பின்னர் அங்குள்ள தமிழர் அமைப்புக்கள் தங்கள் சேவைகளை சிறப்பான முறையில் வழங்குவதற்காக ஒன்றாரியோ அரசின் நிதி உதவிகளைப் பெறும் வழி வகைகள் குறித்து ஆராயப்பட்டது.
அன்றைய சந்திப்பில் மொன்றியால் வாழ் தமிழ் மக்கள் எவ்வாறு தங்கள் தொழில் கல்வி மற்றும் வர்த்தக முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது என்றால் அது மிகையாகாது.