கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தனது உறுப்பினர்கள் சகிதம் யாழ்ப்பாண நூலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் அடங்கிய தொகுதிகளை கையளித்தார். அத்துடன் அவரும் அவரது குழுவினரும் யாழ்ப்பாண நூலகத்தையும் சுற்றிப் பார்வையிட்டனர்.
யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் அடங்கிய குழுவினரை யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் துரைசாசா ஈசன், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தனது விஜயத்தின் போது நூலகத்திற்கு மேலும் உதவிகளைப் பெற்றுத்தர தானும் தனது குழுவினர் அனைவரும் உதவி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.