(மன்னார் நிருபர்)
(20-02-2022)
மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்று சனிக்கிழமை(19) மாலை மன்னார் திருக்கேதீஸ்வரம் இரட்டை மாட்டு வண்டி திடலில் இடம் பெற்றது.
குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது A,B,C,D,E ஆகிய 5 பிரிவுகளில் இடம் பெற்றது.
குறித்த போட்டியில் வடமாகாணத்தில் இருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் காளைகள், போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த போட்டியின் போது 40 சோடி களைகள் பங்கு பற்றி இருந்தது.
இதன் போது வெற்றி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.