கனடா ‘நிவாரணம்’ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமரன் வேண்டுகோள்
யாழ்ப்பாணம் மட’டுவில், சாவகச்சேரியை சேர்ந்தவரும் 21 வயதுடையவருமான. செல்வன் நிஷாவுகேசன் என்னும் இளைஞர் அவசரமாக இருதய சத்திர சிகிச்சை செய்வதற்காக கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையில்அனுமதிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக கனடா செந்தில் குமரன் அவர்களின் ‘நிவாரணம்’ அமைப்பு வழமைபோல
இந்த உயிர் காக்கும் பணிக்காக உதவிக் கரம் நீட்டியது.
அதனால் செல்வன் நிஷாவுகேசனின் இருதய சத்திர சிகிச்சையும் வைத்தியசாலை பூரண வெற்றியோடு நடந்தேறியது. இந்த இளைஞனின் உயிரினை காக்க அதற்கான முழு செலவினையும் தானம் தந்த திரு திருமதி ஷாஜி நடா (Ideal Group) அவர்களுக்கு தாயக மக்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
இந்த இருதய சத்திர சிகிச்சைக்காக சுமார் 9 இலட்சம் இலங்கை ரூபாய்கள் வைத்தியசாலைக்கு செலுத்தப்பட்டுள்ளதற்கான பற்றுச் சீட்டுக்கள் மற்றும் அந்த தொகை வைத்திய சாலைக்கு அனுப்பப்பெற்றமைக்கான Remit bee Money Transfer பற்றுச் சீட்டுக்கள் ஆகியன இங்கே இணைக்கப்ப்ட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் கிழமைகளில் நடக்கவிருக்கும் இரு சிறு மழலைகளின் இதய சத்திர சிகிச்சைகளுக்கு திரு திருமதி ஷாஜி அவர்கள் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றார்கள் ‘நிவாரணம்’ அமைபப்பினர்.
நிஷாவுகேசன் நலம் பெற இறைவனை வேண்டும் அதே நேரத்தில், இந்த சத்திர சிகிச்சைக்காக தங்கள் நேரத்தினை இலவசமாக தந்துதவிய இதய அறுவை சிகிச்சை நிபுணர் காந்திஜி மற்றும் குழுமத்தினர், வைத்திய கலாநிதி குருபரன், ஷாஜி குடும்பத்தினர் அனைவர்க்கும் இறைவனின் முழு ஆசிகள் கிடைக்க வேண்டுமென்றும் வேண்டுகிறேன்! நிஷாவுகேசனின் தாயாரின் கண்ணீர் கல்லையும் கரைய வைக்கும்!
இவரை போல பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் உயிர்களை கையில் பிடித்து கொண்டு மருத்துவமனைகளுக்கும் கோவில்களுக்கும் அலைந்து கொண்டு, ஏதேனும் ஓர் உதவி கிட்டிடாதா என்று ஏக்கத்துடன் – உடம்பில் சோர்வுடனும், மனதில் வலியுடனும் நாட்களை கழித்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு 3 கோரிக்கைகளாவது வருகிறன.
எல்லாவற்றினையும் ஏற்று செய்ய இயலாது என்றாலும், உயிராபத்தில் இருக்கும் நோயாளிகளை முடிந்தவரை எடுத்து காப்பாற்றி வருகிறோம். இதற்கு ஆதரவு அளிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. எமது தாய் மண்ணில் இடம்பெறும் இந்த உயிர்காக்கும் நற்பணிக்கு நீங்களும் பங்களிக்கலாம். பங்களிக்கும் 100 வீதமும் திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான அத்தாட்சிகள் பகிரப்படும். www.Nivaranam.com இவ்வாறு கனடா ‘நிவாரணம்’ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமரன் அறிவித்துள்ளார்.