தற்போது இடம்பெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது உலக நாடுகள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட ஒழுங்கான கட்டமைப்பை மீறும் செயலாக தான் கருதுவதாகவும் இது உலகிறகு உரு கடுமையான அச்சுறுத்தல் எனவும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ஒட்டாவாவில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
ரஸ்யாவின் தற்போதைய உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக கனடா பல அவசர முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய மற்றும் G7 நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் கனடா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு “ஐரோப்பிய ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த வாரம் அதன் இரண்டாவது சுற்று பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. : சர்வதேச சட்டத்தை மீறி, உக்ரேனிய தலைநகரான கிய்வ் மீது ஏவுகணைகள் வீழ்ந்ததால் மனித துன்பத்திற்கு வழிவகுத்த ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் மீது “கொடூரமானதும் நாடு துண்டாடப்படுவதுமான ஒரு தாக்குதல் இது என்று ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தோடு தொடர்புடைய 31 தனிநபர்களின் நிறுவனங்கள் மற்றும் 27 வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நகர்வுகளை கனடிய நிதி அமைச்சகமு; கோடிட்டுக் காட்டியது, கனேடிய ஏற்றுமதியில் சுமார் 750 மில்லியன் டாலர்கள், குறிப்பாக ரஷ்யாவிற்கு விண்வெளி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கனிம ஏற்றுமதிகளை நிறுத்தவும், மேலும் பல ரஷ்ய நிதி நிறுவனங்களுடன் பேணப்படும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் தடை செய்யவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றும் கனடாவின் தடை நடிவடிக்கைகள் எதிர்காலத்தில் ரஸ்யாவை நன்கு பாதிக்கும் என்பதை ரஸ்ய அதிபர் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் அவர் இல்லை என்றும் குறிப்பிட்டார்