வன்னி ஹோப் அவுஸ்திரேலியா மற்றும் ரட்னம் பவுண்டேசன் பிரித்தானியா நிறுவனங்களின்; நிதி அனுசரனையில் கேகாலை மாவட்டத்தில் உந்துகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.
கேகாலை மாவட்டம் கேகாலை கல்வி வலயத்திற்குட்பட்ட உந்துகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை வன்னி ஹோப் நிறுவனத்தின் தலைவர் திரு ரஞ்சன் சிவஞானசுந்தரம் மற்றும் வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் மாலதி வரன் ஆகியோரால் கணனி ஆய்வூகூடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கேகாலை கல்வி வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி ரங்சிகா சிறிவர்த்தன அவர்கள், பிறைட் சமூக அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் திரு என். முரளிதரன், வரக்காபொர தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் திருமதி கோமதி அவர்கள், பாடசாலை அதிபர் திரு பொன்னம்பலம் அவர்கள், வரக்காபொல தமிழ் சமூ அபிவிருத்தி போவையின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். இந்த பாடசாலையானது கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட கேகாலை கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலையாக உள்ளதுடன் இங்கு தோட்டதொழிலாளர்களின் பிள்ளைகளே பெரும்பாலும் கல்வி பயிலுகின்றனர். வன்னி ஹோப் நிறுவனத்தின் தலைவர் தன்னுடைய உரையில் வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுண்டேசன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து திறன் வகுப்பறை வழங்கும் முதலாவது வேலைத்திட்டத்தை கேகாலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்து வதையிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கேகாலை கல்வி வலய கோட்டக் கல்வி பணிப்பாளர் திருமதி ரங்சிகா சிறிவர்த்தன தனது உரையில் தோட்டப்புற பாடசாலைகளுக்கு இவ்வாறான வேலைத்திட்டங்களை எமது புலம்பெயர் உறவுகள் முன்னெடுதக்க முன்வந்தமை வரவேற்க தக்க விடயமாகும். நீங்கள் வழங்கிய திறன் வகுப்பறையானது இங்குள்ள தோட்டப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுனையாக இருக்கும் என்பதையும் தெரிவித்தார். எதிர்காலத்தில் உங்களது தொண்டு நிறுவனத்தின் ஊடாக இவ்வாறான உதவிகளை பின்தங்கிய வழங்களற்ற பாடசாலைகளுக்கு வழங்குவதன் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.