யாழ்ப்பாணம்-சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில், பாடசாலையின் பழைய மாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ ச.லம்போதர குமாரசாமி குருக்கள் அவர்கள் தமது பாட்டன், பாட்டியாகிய சிவஸ்ரீ மு.குமாரசாமி குருக்கள் கு.வல்லவாம்பிகை ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நான்காவது நவீன திறன் வகுப்பறையானது (SMART PANEL) வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களால் இன்று 27-02-2022 திறந்து வைக்கப்பட்டது
இத்திறன் வகுப்பறையின் நினைவுப் பலகையை வலிகாமம் வலயக் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.சி. முரளிதரன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததோடு வித்தியாலயத்தின் பழைய மாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவுமாகிய இத்திறன் வகுப்பறையை அமைத்துத் தந்தவருமாகிய சிவஸ்ரீ ச.லம்போதர குமாரசாமி குருக்கள் அவர்கள் திறன் பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததோடு வைபவ ரீதியாக இயக்கியும் வைத்தார்
அத்துடன் இத்திறன் வகுப்பறைக்குரிய உள்ளக வசதிகளையும் செய்து தந்துள்ளார்.
இப்பேருதவியை வழங்கிய சிவஸ்ரீ ச.லம்போதர குமாரசாமி குருக்கள் அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.