இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் நாளை 1.3.2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு ருத்ர ஹோமத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது.
சிவப்ருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்று வழிபட்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய்கள் நீங்கும், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் அடையலாம்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203