– தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை
இலங்கையின் சிறந்த தேசிய கால்பந்தாட்ட தமிழ் வீரர் மன்னாரைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு மாலைதீவில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் இவரது மரணம் தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை மிகுந்த சந்தேகங்கொள்கின்றது.
மேலும் பியூஸ்லஸ் சிறு பராயம் தொடக்கம் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரராவார் அவரது அதீத திறமையினால் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம் பிடித்திருந்தார் என்பதும் இவர் ஒரு தமிழர் என்பதால் இவர் மீது இலங்கையின் பெரும்பான்மை இன விளையாட்டு வீரர்கள் காழ்ப்புணர்ச்சியில் இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எனவே மாலைதீவில் கால்பந்தாட்ட போட்டி ஒன்றுக்காக சென்றிருந்த வேளை அங்கு தங்கியிருந்த இடத்திலே தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார் இது திட்டமிட்ட படுகொலை யாக இருக்கலாம் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கருதுகின்றது.
எனவே டக்ஸன் பியூஸ்லஸ் அவர்களின் மரண விசாரணை நீதியான முறையில் இடம் பெற வேண்டும் எனவும் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் அறியப்பட்டு பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்த விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகளையும், இலங்கை அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.