அரசாங்கத்தை நம்பி சேதன பசளை யை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம்-
(மன்னார் நிருபர்)
(01-03-2022)
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அகத்தி முறிப்பு குளத்தின் கீழ் இம் முறை பெரும்போக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ள விவசாயிகள் தற்போது நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சேதன பசளையை பயன்படுத்தி இம்முறை குறித்த பகுதி விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு இடர் களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், அப்பகுதி விவசாயி ஒருவர் சுமார் 7 ஏக்கர் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும்,குறித்த 7 ஏக்கர் விவசாய நடவடிக்கைகளின் போது மொத்தம் 50 மூட்டை நெல் மாத்திரமே கிடைத்துள்ளதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் விவசாய செய்கையின் போது சுமார் 48 மூடை நெல் கிடைப்பது வழமை.ஆனால் இம்முறை 1 ஏக்கர் விவசாய செய்கைக்கு சுமார் 7 மூடை நெல் மாத்திரமே கிடைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் ஒவ்வொரு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல் வெட்டுக்கூலியை செலுத்த முடியாத நிலை காணப்படுவதோடு,வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதோடு,நகைகளை அடகு வைத்துள்ள போதும் அவற்றை எவ்வாறு மீட்டு எடுப்பது என்று தெரியாத நிலை உள்ளதாக பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
-மேலும் சேதனைப்பசளை,எண்ணை போன்றவை கடைகளில் கடனாக பெற்றுள்ள போதும் கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தை நம்பி சேதனைப் பசளை பயன்படுத்திய விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளனர்.
-அரசாங்கத்தினால் வழங்கிய எண்ணை ஒன்றை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய நிலையில் விவசாயிகளின் காலில் உபாதை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நஸ்டத்தின் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
-முசலிப் பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும்போக விவசாயம் செய்யப்பட்டுள்ளது.தற்போது அருவடையும் இடம் பெற்று வருகின்றது.ஒவ்வொரு விவசாயிகளும் வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.
விவசாய கடன் பெற்றுள்ளனர். தமது தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர். பெற்ற கடனை மீளச் செலுத்துவது எப்படி??? அடகு வைத்த தங்க நகைகளை மீளப் பெற்றுக் கொள்வது எப்படி??என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சேதனப்பசளை என்று விவசாயிகள் ஆகிய எங்களை மண்னோடு மண்ணாக ஆக்கியுள்ளது இந்த அரசாங்கம்.
எனவே எங்களுக்கு யூரியாவை வழங்குவதற்கு முன்னர் நஸ்ர ஈட்டை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்.என பாதிக்கப்பட்ட முசலி விவசாயிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.