கியுபெக் மாகாணப் பாராளுமன்றத்தில் முதற் தடவையாக ‘தமிழர் மரபுரிமை மாதம்’ தொடர்பாக உரையாற்றிய உறுப்பினர் கார்லோஸ் ஜே. லீடாவ் (ராபர்ட் பால்ட்வின் பாராளுமன்ற உறுப்பினர்) MNA Carlos Jleitao அவர்களை நேரடியாக பாராட்டி கௌரவித்த மொன்றியால் திருமுருகன் ஆலய பிரதிநிதிகள் தமிழ் மக்கள் சார்பில் தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்
கார்லோஸ் ஜே. லீடாவ் (ராபர்ட் பால்ட்வின் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் அண்மையில் கியுபெக் மாகாணப் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது மொன்றியால் வாழ் தமிழ் மக்களின் பெருமைகளையும் அவர்கள் கனடிய பிரதான நீரோட்டத்தில் எவ்வாறு நீண்ட காலமாக பங்கெடுத்து வருகின்றார்கள் என்பதையும் குறிப்பாக் மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தின் மகத்துவத்தையும் புகழ்ந்துரைத்துள்ளார்.
அவர் தனது உரையில் பின்வருமாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“தை பொங்கல் தமிழ் பாரம்பரியத்தின் பண்டிகையாகவும் அந்த பண்டிகை கொண்டாடப்படும்
தை மாதம் ({ஜனவரி) முக்கிய மாதமாகவும், திகழ்கின்றது
தை பொங்கல் தமிழ் சமூகத்திற்கு மிகவும் முக்கியமான பாரம்பரிய விழாவாகவும் இருந்து வருகின்றது, ஏனெனில் ஏராளமான அறுவடைகளைக் கொண்டாடுவதன் மூலம், அவர் இறைவனுக்கும் இயற்கை கடவுளான சூரியனுக்கும் நன்றி செலுத்துகின்றார்கள்.
இது தமிழர்களின் மதிப்புகளான அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்கத்தை நன்கு பிரதிபலிக்கிறது. தமிழ் பாரம்பரிய மாதம் கியூபெக் மற்றும் கனடாவின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார கட்டமைப்பிற்கு இந்த ஆற்றல்மிக்க சமூகத்தின் பங்களிப்பைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகும். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கியூபெக் வாழ் மக்கள் அவர்களின் உள்ளடக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவை நமக்கு மிகவும் பிடித்தமானவை. அத்துடன் உலகளாவிய கலை கலாச்ச்சார அரசியல் விவகாரங்களையும் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் போற்றி வருகின்றனர்.
நான் ராபர்ட் பால்ட்வின் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் அருள்மிகு முருகன் கோவில் மற்றும் சைவ மிஷன் உறுப்பினர்களின் பங்களிப்பை நன்கு அறிவேன் கனடாவில் உள்ள கியூபெக்கில் உள்ள மொன்றியால் நகரில் உள்ள பெரிய தமிழர் சமூகத்தின் கட்டமைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நான் இந்த சபையில் எடுத்துரைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.
நீங்கள் எப்போதும் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்புக்கும்இந்த சமூகத்தின் உறுப்பினர்களுக்கும் எனது நன்றி” என அவர் கியுபெக் மாகாணப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மொன்றியால் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று (ராபர்ட் பால்ட்வின் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்) கார்லோஸ் ஜே. லீடாவ் (MNA Carlos Jleitao)அவர்களை பாராட்டி மகிழ்ந்த வெஸ்ட் ஐலண்ட் தமிழ்க் கலாச்சார சங்கத்தின் பொருளாளரும் அருள்மிகு திருமுருகன் ஆலய பிரதம குருவுமாகிய சிவஶ்ரீ ஶ்ரீ ஐயா சங்கத்தின் தலைவர் நடராஜா வாகீசன் மற்றும் ஶ்ரீ மணிகண்டன் ஐயா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் அ வர்களுக்கு பொன்னடை போர்த்தி மாலை அணிவிப்பதை படத்தில் காணலாம்
செய்தி கணேஸ்