நாளையொட்டி ஒமந்தையைச் சேர்ந்த பெண் தலைமைதாங்கும் குடும்பத்தின் நலன் கருதி பசுமாடு ஓன்று வழங்கப்பெற்றது
அண்மையில் கனடாவில் காலமான திருமதி செல்வநாயகி வேலுப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவு நாளையொட்டி ஒமந்தையைச் சேர்ந்த பெண் தலைமைதாங்கும் குடும்பத்தின் நலன் கருதி பசுமாடு ஓனு;ற வழங்கப்பெற்றது இந்த வாழ்வாதார உதவியானது கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடா வன்னிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி பசுமாட்டைப் பெற்றுக்கொண்ட பெண் தலைமை தாங்கும் குடும்பத்தின் தலைவியான செ. சுமதி அவர்கள் கனடாவில் வசிக்கும் காலஞ்சென்ற திருமதி செல்வநாயகி வேலுப்பிள்ளை அவர்களின் பிள்ளைகளுக்கு தனது கைபட எழுதிய நன்றி தெரிவிக்கும் கடிதம் இங்கே காணப்படுகின்றது.
இந்த மனித நேயப் பணியைச் செய்த அமரத்துவ மாது திருமதி செல்வநாயகி வேலுப்பிள்ளை அவர்களின் கனடா வாழ் பிள்ளைகள் அனைவரையும் மற்றும் இந்த திட்டததின் மூலம் தனக்கு பசு மாடு கிடைக்க வழி செய்த கனடா யவன்னிச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் தலைவி செ. சுமதி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த மனித நேயப் பணியில பங்கெடுத்த அனைவருக்கும் கனடாவில் இயங்கிவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ அமைப்பின் இயக்குனர் சபையினர் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.