பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவியில் சிக்கிய ரமேஷ் என்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது பல சுவாரசிய தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
70 வயதான ரமேஷுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் 3 பிள்ளைகள் உள்ள நிலையில், 3வதாக ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் தமிழகம் வந்த ரமேஷ், பூட்டியிருந்த வீடுகளைக் குறிவைத்து நகை, பணத்தைத் திருடி, பெண்களுடன் பொழுதைக் கழித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்காக தமிழக போலீசாரால் அவர் 4 முறை கைதாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் பெங்களூரு சென்று திருட்டில் ஈடுபட்டபோதுதான், கர்நாடக போலீசில் சிக்கியுள்ளார்.